
For Rajani Thiranagama
கதையாடலுக்கான அழைப்பு
எதுவித அரசியல் பின்னணியுமற்ற கோட்பாடுகளற்ற மிக இளம் தலைமுறையின் சிலேட்டாக முரண்வெளியைக் கொள்ள முடியும். நீங்கள் நுள்ளும் போது சரி திட்டும் போதும் சரி உரத்த குரலில் அழத் தவறாத ஓர் குழந்தையின் குரல் போல நாம் முரண்வெளியில் அலறியவாறேயிருப்போம் - நுள்ளுவதையும் கிள்ளுவதையும் பெரியவர்கள் நிறுத்தி ஓர் புன்னகை புரிவார்களேயானால் சிலவேளை நாம் சிரிக்கவும் கூடும். பல வேளைகளில் அவர்கள் தரும் இனிப்புகளில் நஞ்சுண்டா என ஆராயவும் கூடும்.
அடயாளம் காணப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள தோழர்களால் முரண்வெளி இயக்கப் படுகிறது. எமது குழுவில் யாரும் திட்டவட்டமான கோட்பாடுகளையோ அரசியல் நிலைப்பாடுகளையோ கொண்டவர்களல்ல. சாய்வுகள் நம்மிடமும் உண்டு, ஒருவகையில் அவை தவிர்க்க முடியாதவை கூட, அல்லவா?
முரண்வெளி கோப்புகள் மின் அஞ்சல் வழியாக அனுப்பிவைக்கப்படும்.
எமது பெறுநர் பட்டியலில் நீங்கள் இணைந்து கொள்ள விரும்பின் எமது தொடர்பு மின் அஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
அரசியல் தொடர்புகளற்ற யாரும் இணைந்து கொள்ளலாம். அரசியல் பின்னணிபற்றி தெளிவான எல்லைக்கோடொன்றை நாம் கடைப்பிடிக்கிறோம். எதிர்வினையாற்றுவதற்கு இது நிபந்தனையல்ல. அனைத்துத் தரப்பிடமிருந்தும் எதிர்வினைகளை நாம் எதிர்பார்க்கிறோம்.
எதிர்வினைகள், கதையாடல்கள் வரவேற்கப்படுகின்றன.
தொடர்புகளுக்குmuranveli@yahoo.co.in